Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமரகீர்த்தியின் குடும்பத்துக்கு 90 இலட்சம் ரூபா நிதியுதவி

அமரகீர்த்தியின் குடும்பத்துக்கு 90 இலட்சம் ரூபா நிதியுதவி

அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 90 இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கையளித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், அதனை அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஜனாதிபதி வழங்கினார்.

இதற்காக 183 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த மே 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் நாடாளுமன்ற உறுப்பினராக அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles