களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புதன்கிழமை(16 ) காலை 8.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, மொறொந்துடுவ, களுத்துறை (வடக்கு/தெற்கு), கட்டுகுருந்த/நாகொட, பொம்புவல, பிலமினாவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.