ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அனைவருக்கும் கிங்ஸ்பரி ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு நேர விருந்தை இறுதி நேரத்தில் ரத்து செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்தின் முடிவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட பாரம்பரிய தேநீர் வைபவத்தை அரசாங்கம் செலவைக் குறைப்பதாகக் கூறி இரத்துச் செய்திருந்தது. பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் இரவு விருந்தை நட்சத்திர ஹோட்டலில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டார்.
ஆனால் இதனை உள்நாட்டு இணையத்தளம் ஒன்று வெளிப்படுத்தியதால், இந்த இரவு நேர விருந்தினை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.