அல்கைடா பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய தாலிப் என்பவரின் வர்த்தக பங்காளராக இருந்த மொஹமட் இர்ஷாட் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
தாலிப் என்ற வர்த்தகர் கடந்த 2021ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டதுடன், அவர் அல்கைடா பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கி வந்தவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் நிசாருடன் இலங்கையில் பெரும் வர்த்தகங்களில் பங்குதாரராக இருந்திருப்பதுடன், அவர்கள் வருடாந்தம் 2 லட்சம் டொலர்கள் வரையில் வருமானமாக ஈட்டியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இலங்கையரின் சொத்துக்களை அமெரிக்காவின் திறைசேரி முடக்கியுள்ளதுடன், அவருடன் இத்தாலியைச் சேர்ந்த இன்னுமொருவருக்கும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.