எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளின் மக்கள்தொகை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
