Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலிடத்தின் உத்தரவு காரணமாக இரு ஊடகவியலாளர்களுக்கு சிஐடி அழைப்பு

மேலிடத்தின் உத்தரவு காரணமாக இரு ஊடகவியலாளர்களுக்கு சிஐடி அழைப்பு

இரண்டு ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மீண்டுமொரு போராட்டம் நடைபெறும் எனவும் SJB நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்ததற்காக குறித்த இரண்டு பத்திரிகையாளர்களும் சிஐடிக்கு அழைக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன மற்றும் தரிந்து உடுவரகெதர ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலிடத்தின் உத்தரவு காரணமாகவே இவ்வாறு சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இவ்வாறு இடையூறு செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles