Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி மீட்பு

தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி மீட்பு

3 வயது சிறுமி மீது தந்தை கொடூரத் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சிறுமி இன்று காலை யாழ்ப்பாணம் பண்ணைபாலத்தடியில் மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 7.45 மணியளவில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த குறித்த சிறுமியும் அவரது தாயும் திருகோணமலையிலிருந்து தப்பி சென்று யாழ். பண்ணைப் பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது குடும்ப நல உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த காணொளியில் சிறுமியை தாக்கும் சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

3 வயது குழந்தை மீது தந்தை கொடூரத் தாக்குதல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles