அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அசோக அபேசிங்க MP தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரேரணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி – பெப்ரவரி மாதத்துக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருளுக்கு பாரிய வரி விதிக்கப்படுவதால் இவ்வாறு கூறியதாக சபை உறுப்பினர் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் நாட்டில் உள்ள அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே எரிபொருள் விலை சூத்திரத்தின் படி திருத்தம் செய்யப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.