இலங்கையின் பொருளாதாரம் மீட்சி பாதையை அடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையொன்றில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தாலும், இரண்டாம் அரையாண்டில் ஸ்திரநிலைமையை நோக்கி பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருநது அவசர நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார மீட்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, 2023ம் ஆண்டின் இறுதி பகுதியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான பாதைக்குத் திரும்பும் என்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.