Sunday, December 21, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 வயது குழந்தை மீது தந்தை கொடூரத் தாக்குதல்!

3 வயது குழந்தை மீது தந்தை கொடூரத் தாக்குதல்!

3 வயது பெண் குழந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் தந்தை ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சந்தேக நபர், மனைவியையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி, அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்

அதே திகதியன்று விசேட தேவையுடையவர்களது சமூக ஊடக குழுமம் (வாட்ஸப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் தனது மனைவியின் மரண அறிவித்தல் சுவரொட்டி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தலும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த பதிவுகளை ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 வயது பெண் குழந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் தந்தை ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.3 வயது பெண் குழந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் தந்தை ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய பெண் ஒருவரை சந்தேக நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சந்தேக நபர், மனைவியையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி, அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்

அதே திகதியன்று விசேட தேவையுடையவர்களது சமூக ஊடக குழுமம் (வாட்ஸப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் தனது மனைவியின் மரண அறிவித்தல் சுவரொட்டி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தலும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த பதிவுகளை ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles