யால சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) உதவியும் கோரப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த விசாரணை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவுக்குப் பதிலளித்த அமைச்சர், இதற்குப் பொறுப்பானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட வாகனங்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.