Wednesday, April 2, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனத்தின் அறிக்கை

தனுஷ்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனத்தின் அறிக்கை

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நிரபராதி என கிரிக்கெட் வீரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கை தொடர தனுஷ் குணதிலக்கவினால், சிட்னியை தளமாகக் கொண்ட SANS Law என்ற சட்ட நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது நியூ சவுத் வேல்ஸின் உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தனுஷ்க குணதிலக்க அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும். நடவடிக்கைகளின் ஆரம்பக் கட்டங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, மேலும் நீதிமன்றத்தின் முன் இந்த விஷயத்தை சரியாக கொண்டு செல்ல அனுமதிக்கிறோம்”என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles