குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.