Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருளை வழங்காத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

எரிபொருளை வழங்காத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேவையாக எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.

எரிபொருள் விலைச்சூத்திரன்படி கடந்த 5 ஆம் திகதி எரிபொருளின் விலைகள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் அவற்றை கொள்வனவு செய்து விநியோகிப்பதில் காட்டிய தயக்கம் காட்டியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெற்றோலியத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles