இந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் 12, 431 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இதன்படி, ஜனவரி 1ம் திகதி முதல் நவம்பர் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 580,689 சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாத ஆரம்பத்தில் ரஷ்யாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.