அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலிருந்து பிரவேசித்திருந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தினர்.
குறித்த வாள் வெட்டு தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகிய அவர் தற்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.