மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தணிக்கையின் போது இது தெரியவந்துள்ளது.
தலா 255 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய தடுப்பூசிகளை, தலா 40,869 ரூபாவுக்கு 1,563 தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதற்காக அரச மருந்து கூட்டுத்தாபனம் சுமார் 7 கோடி ரூபா செலவிட்டது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கணக்காய்வாளர் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
பாலியல் தூண்டுதலுக்குப் பயன்படுத்தப்படும் இந்தத் தடுப்பூசியை மதிப்பிடப்பட்ட விலையிலோ அல்லது அதற்கு அண்மைய விலையில் வாங்கினால் சுமார் 4 இலட்சம் ரூபா மட்டுமே செலவாகியிருக்கும்.
ஆனால் இந்தத் தடுப்பூசிக்காக 6 கோடியே 87 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.