10 முக்கிய அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IMF இன் பரிந்துரைகளுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
இந்த வரவுசெலவுத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக 10 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான யோசனைகளும் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.