Sunday, July 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதகு ஒன்றில் சிக்கி குட்டி யானை பலி

மதகு ஒன்றில் சிக்கி குட்டி யானை பலி

பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில், 7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில் சுற்றித் திரிந்த குட்டி யானை தவறி ஓடையில் விழுந்துள்ளது.

பிரதேசவாசிகள் குட்டி யானையைக் காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளது . இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மகாவலி அதிகாரசபையின் விஜயபாகுபுர மகாவலி பிரதேச அலுவலக அதிகாரிகள் பலர், வனவிலங்கு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, யானையை மீட்க பல மணிநேரம் முயற்சித்த போதும், சில மணித்தியாலங்களில் யானை உயிரிழந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles