Monday, November 18, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய வைத்தியசாலையில் இரு தொலைக்காட்சிகள் திருட்டு

தேசிய வைத்தியசாலையில் இரு தொலைக்காட்சிகள் திருட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்த இரண்டு 41 அங்குல தொலைக்காட்சிகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கையில்,

இரண்டு தொலைக்காட்சிகளும் காணாமல் போனது தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பொலிஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் உடமைகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles