Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பிலுள்ள தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் (Poj Hanpol) உத்தியோகபூர்வ இல்லத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்கு வெளியிலும், மற்றுமொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்குள் இருந்த போதும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தில் கையடக்கத் தொலைபேசி, தாய்லாந்து பணம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles