Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரானை கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இம்ரானை கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசுக்கு எதிரான பேரணியில் கொல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதன் விளைவாக, பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அன்றாட நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகளில் டயர்களை எரித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இம்ரான் கான் கடந்த 28ஆம் திகதி லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு அரச எதிர்ப்பு பேரணியை தொடங்கினார்.

அந்த பேரணியின் போது, ​​கடந்த வியாழன் அன்று அவர் துப்பாக்கிதாரியொருவரால் சுடப்பட்டார் என்பது குறிப்படத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles