எதிர்வரும் 03 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இறக்குமதியாளர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுடன் கலந்தாலோசித்து, அமைதிக்காக மக்களுக்குத் தேவையான பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், மக்களின் நலன் கருதி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை பேணப்படுவதாகவும், அடுத்த சில மாதங்களில் கோதுமை மாவின் தற்போதைய விலையை தக்க வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.