அடுத்த பதினைந்து நாட்களில் நிறுவன வரிகளை உயர்த்தவும், நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை 50%க்கு மேல் உயர்த்துவதற்கு எல்லாம் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, இந்த மாதத்தில் வீட்டுத் திட்டங்களின் ஒப்புதலுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், இதர சேவைகளை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் பல கட்டணங்களையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த தேசிய உற்பத்தியில் 65% இலிருந்து 90% வரை அரசாங்க வருமானத்தை உயர்த்துவதற்காகவே இந்த வரிகளும் கட்டணங்களும் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.