Friday, November 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசியப்பட்டியலில் பழங்குடி பிரதிநிதியொருவர் இடம்பெற வேண்டும் - வேடுவத் தலைவர்

தேசியப்பட்டியலில் பழங்குடி பிரதிநிதியொருவர் இடம்பெற வேண்டும் – வேடுவத் தலைவர்

தேசியப்பட்டியலில் பழங்குடி பிரதிநிதியொருவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.

பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது நாட்டில் முதல் தடவையாக பிரதேச சபை உறுப்பினராக பூர்வீக பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் என் மருமகள், ஹென்னானிகலவில் வசிக்கிறார். இந்த நாட்டின் முதல் மற்றும் பழைமையான சொந்தக்காரர்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ள எமது மக்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காமை தொடர்பில் நான் வெகு காலமாக பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் மறதியில் மங்கிப்போனது” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles