நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 க்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பிலான விவாதமும் நாளை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட உள்ளது.