Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிப்தில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்

எகிப்தில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எகிப்தின் Sharm El Shiek நகரில் நேற்று (6) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாயத்தின் இரண்டாவது ஜெனரல் பெட்ரிசியா ஸ்கொட்லாந்து கே.சி, ருவாண்டாவின் ஜனாதிபதி பொல் கலாமா, பார்படோஸ் பிரதமர் சாண்ட்ரா மேசன் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அலோக் ஷர்மா ஆகியோருடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles