உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடம் (IDA) இருந்து இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழன் அன்று வொஷிங்டனில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தின் பின்னர் இலங்கைக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
IDA என்பது உலக வங்கியின் ஒரு நிறுவனமாகும்.
இது வளரும் நாடுகளுக்கு சலுகைக் கடன்களை வழங்கும் நிதி வசதிகளை வழங்குகிறது.
மேலும், இந்த சந்திப்பில், இலங்கையை மத்திய வருமான நாடு (MIC) நிலையிலிருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடு (LIC) நிலைக்கு தற்காலிகமாக தரமிறக்குவதற்கான இலங்கையின் கோரிக்கையை IDA மதிப்பாய்வு செய்துள்ளது.
இதனைச் செய்வதன் மூலம் இலங்கைக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
#Sunday Times