Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதலை புலிகளின் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது

விடுதலை புலிகளின் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது

வாகரை வெருகல் பாலத்திற்கு அருகில் தொல்லியல் பெறுமதிமிக்க டயலொக்கல பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் வாகரை, திருகோணமலை, வத்தேகம, நுகவெல மற்றும் குன்னேபான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் வாகரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles