Wednesday, May 14, 2025
29.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹலோவீன் நெரிசல்: உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு கொரியா நிதியுதவி

ஹலோவீன் நெரிசல்: உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு கொரியா நிதியுதவி

சியோலில் உள்ள இடாவோனில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 27 வயதான முகமது ஜினாத்தின் குடும்பத்துக்கும் அவரது இறுதிச் சடங்குகளுக்காகவும் கொரிய அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது.

ஒக்டோபர் 29ஆம் திகதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி உடத்தலவின்ன ஜினாத்தின் குடும்பத்தினருக்கு கொரிய தூதுவர் சந்துஷ் வூஜின் ஜியோங், கொரிய அரசாங்கத்தின் சார்பாகவும் கொரிய மக்களின் சார்பாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

தூதுவர் நேற்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து தனது அரசாங்கத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவித்தார்.

26 வெளிநாட்டவர்கள் உட்பட 156 உயிர்களை இழந்தமைக்காகவும், ஹலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக தனது அனுதாபங்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles