Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் 60 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் 60 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் இன்று(4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் படகொன்று வருவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவத்தினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட 60 கிலோகிராம் கஞ்சா இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles