மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மேல்மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 லீற்றர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.