எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் எரிவாயு கொள்கலன்களுக்கான கோரல்களை வழங்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இந்தப் பிரச்சினை முழுமையாக சீராக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.