Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 4 மில்லியன் நட்டயீடு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 4 மில்லியன் நட்டயீடு

பதுளை – பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டது.

இதற்கான ஒருபகுதி காசோலை தோட்ட நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நேற்று வழங்கப்பட்டது.

அத்துடன், 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை தோட்ட நிர்வாகத்தினால், இழப்பீட்டு ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரம் குறித்த முன்னனுபவம் இல்லாத தமிழரசன் கணேசமூர்த்தி என்ற 25 வயதான இளைஞரை பலவந்தமாக மின்னார பணியில் ஈடுபடுத்தியதால் கடந்த மாதம் 9ம் திகதி அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு நீதிக்கோரி, சடலத்தை தொழிற்சாலையில் வைத்து தோட்டமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles