கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கும் திட்டம் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தாம் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, போதிய ஏற்பாடுகள் இல்லாததால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கும் திட்டம் முடங்கியுள்ளது.
இந்த ஏற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுஅதன் பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.