இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளன.
‘வர்யாக்’ ஏவுகணை கப்பல்இ அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் ‘போரிஸ் புடோமா’ டேங்கர் தலைமையிலான பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவு பசிபிக் கடற்படையின் தெற்கே இலங்கைக்கான பொறுப்பு வலயத்திற்குள் நுழைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பிரிவினர் மத்தியதரைக் கடலில் இருந்து விளாடிவோஸ்டோக்கில் அமைந்துள்ள தங்கள் தளத்திற்கு கடலுக்கு அப்பாற்பட்ட கடல் வலயத்தில் செயற்பட்ட பின்னர் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடலைக் கடந்து கிழக்கு ரஷ்யாவை நோக்கிச் செல்கின்றன.