Saturday, September 13, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு45 நாட்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்

45 நாட்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டில் டொலர்கள் இல்லாத நிலையில், தாமதக் கட்டணம் செலுத்தி கப்பலை நங்கூரமிடத் தேவையில்லை எனவும், கையிருப்பில் உள்ள டொலர்களை வீணடிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மசகு எண்ணெய்யின் தரத்தில் பிரச்சினை இருப்பதாவும் இது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles