Thursday, November 14, 2024
26.5 C
Colombo
செய்திகள்விளையாட்டு'போலி களத்தடுப்பு' செய்தரா விராட் கோலி?

‘போலி களத்தடுப்பு’ செய்தரா விராட் கோலி?

அவுஸ்திரேலியா – அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின்போது இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி “போலியான களத்தடுப்பில்” ஈடுபட்டதாக பங்களாதேஷ் அணி குற்றம் சாட்டியுள்ளது.

பங்களாதேஷ் இன்னிங்ஸில் ஏழாவது ஓவரில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் துடுப்பாடியபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.

லிட்டன் தாஸ் அடித்த பந்தை அர்ஷ்தீப் சிங் விக்கெட் காப்பாளரை நோக்கி வீசினார். அவ்வேளையில் வட்டத்தினுள் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த கோலி, பந்து அவரைத் தாண்டிச் சென்றபோது, பந்தை, பந்து வீச்சாளர்களின் முனையை நோக்கி வீசுவது போல் வெறும் கையால் பாவனை செய்தார்.

இந்த செயற்பாட்டுக்கு எதிரதாக கள நடுவர்களான மரைஸ் எரஸ்மஸ் அல்லது கிறிஸ் பிரவுன் இருவரும் அந்த நேரத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

போலியான களத்தடுப்புக்கு அபராதமாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென பங்களாதேஷ் தெரிவிக்கின்றது.

இது குறித்த பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் நூருல் ஹசன் கூறுகையில், மைதானம் ஈரமாக இருந்ததை நாம் அறிவோம்.

விராட் கோலி பந்தை வீசுவதுபோல பாசாங்கு செய்தார். அதற்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது கூட நடக்கவில்லை என்றார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை சட்டம் 41. 5 இன் படி, “எந்தவொரு களத்தடுப்பாளரும் வேண்டுமென்றே, வார்த்தை அல்லது செயலால், பந்தைப் பெற்ற பிறகு, துடுப்பாட்ட வீரரை திசை திருப்ப, ஏமாற்ற அல்லது தடுக்க முயற்சிப்பது நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக கள நடுவர் துடுப்பாட்ட தரப்புக்கு ஐந்து உதிரி ஓட்டங்களை வழங்குவார். இந்த செயலுக்கான காரணத்தை களத்தடுப்பில் ஈடுபடும் அணியின் தலைவருக்கு தெரிவிப்பார்.

மேலும் இந்த செயற்பாடு முடிந்தவுடன் துடுப்பாடும் அணியின் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles