Thursday, November 14, 2024
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்

மலையக இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றமையால் மலையக இளைஞர்களுக்கு அங்கு பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (02) உரையாற்றும் போதே மிசுகோஷி ஹிடேகி இவ்வாறு கூறியுள்ளார்.

தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளதாகவும் அதற்கான திறன்கள் காணப்படுமாயின் ஜப்பானில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்றார்.

மலையக இளைஞர்களுக்கு ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், தொழிலுக்கான வாய்ப்பை இலகுவாக வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles