Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில இடங்களில் பெரசிட்டமோல் கூட இல்லை - GMOA

சில இடங்களில் பெரசிட்டமோல் கூட இல்லை – GMOA

சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுவாக நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால், நாட்டில் தற்போது சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles