Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றில் தவறி விழுந்து 15 வயது சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்து 15 வயது சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்து 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற குறித்த மாணவர் நேற்று (02) பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.

குறித்த கிணற்றில் நீராட சென்ற போதே அதில் அவர் தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles