Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையுடன் கைகோர்க்கும் புதிய விமான நிறுவனங்கள்

இலங்கையுடன் கைகோர்க்கும் புதிய விமான நிறுவனங்கள்

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் இலங்கைக்கான தனது சேவைகளை இன்று (03) ஆரம்பிக்கின்றது.

அதேவேளை எயார் பிரான்ஸ் நாளை (04) முதல் இலங்கைக்கான தனது சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மே 2023 வரை வாராந்த விமானங்களுடன் மீண்டும் இலங்கைக்கான தமது சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த பருவ காலத்தில் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles