Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு மீண்டும் மலரும்… எமது கைகளில் ரத்தக் கறைபடாது - ரோஹித அபேகுணவர்தன

மொட்டு மீண்டும் மலரும்… எமது கைகளில் ரத்தக் கறைபடாது – ரோஹித அபேகுணவர்தன

உதிர்ந்த மொட்டு இன்றைய நாளுக்கு பின்னர் மீண்டும் மலரும் என்றும் தமது கட்சியில் எவருடைய கைகளிலும் இரத்த கறைபடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பல்வேறு சதிகளால் ஆட்சியை இழக்கும் நிலைக்கு வந்துள்ளோம். அரசாங்கம் இல்லாவிட்டாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பணிகளை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்கிறது. வரும் எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்கள் கட்சியில் யாருடைய கையிலும் ரத்தம் இல்லை. ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்க மக்களுக்கு அதிகாரம் உள்ளது. மற்றபடி, வன்முறை மற்றும் வற்புறுத்தல் மூலம் அரசாங்கத்தை அமைக்க யாருக்கும் உரிமை இல்லை. எமது கட்சி மிகவும் இளமையான கட்சியாக இருந்தாலும் பல மாபெரும் வெற்றிகளை பதிவு செய்த கட்சியாகும். என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles