Monday, May 12, 2025
29.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்தை செலுத்தாதிருக்கும் அரச நிறுவனங்கள்

நீர் கட்டணத்தை செலுத்தாதிருக்கும் அரச நிறுவனங்கள்

தீர்க்கப்படாத கட்டண பட்டியல்களில் 6.5 பில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களால் 800 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலுவைத் தொகையை மீளப் பெறுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தந்த நுகர்வோர் வலயங்களின் அடிப்படையில் மீட்பு செயல்முறை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண நுகர்வோரின் தாமதமான கொடுப்பனவுகளுக்கான 2.5% மேலதிகக் கட்டணம் அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles