Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியுடன் தொடர்பிலிருந்த கலைஞர்களின் வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடி விசாரணை

திலினியுடன் தொடர்பிலிருந்த கலைஞர்களின் வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடி விசாரணை

பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மொடல்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கலைஞர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்படுகின்றன.

கடந்த 29ஆம் திகதி, நடிகை செமினி இட்டமல்கொடவிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், அவரது வங்கிக் கணக்குப் பதிவுகளைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles