சர்வதேச சந்தையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை இலங்கையிடம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெறும் வர்த்தக மாநாடு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
நாணயக் கடிதங்களைப் பெற்று எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறது.
பெற்றோலிய உற்பத்தி நாடுகளிடம் இருந்து உதவி எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.