Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களுக்கு விற்பனை

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களுக்கு விற்பனை

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலருக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு விற்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 143,700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தக் குடியிருப்புகள் உள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles