Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 பாதீட்டின் ரகசியங்கள்

2023 பாதீட்டின் ரகசியங்கள்

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தில் 90 வீதத்தை வரி மூலம் பெறுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதாரத்துறைக்கு 43200 கோடி ரூபாவும் கல்விக்காக 50400 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 36,700 கோடி ரூபா பாதுகாப்புச் செலவினங்களுக்காக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சமூகப் பாதுகாப்பிற்காக 57,200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அந்த வருடத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 788500 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles