Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை கற்பிக்க தீர்மானம்

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை கற்பிக்க தீர்மானம்

அடுத்த வருடம் (2023) பாடசாலைகளில் தரம் 10க்கு செயற்கை நுண்ணறிவை (AI) ஒரு பாடமாக அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு மைக்ரோசொப்ட் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் கல்வி முறையானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து ஆசிரியர்களும் தமது கல்விப் பாடங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வகையில் பயிற்சியளிக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles