மலேசியா அரசாங்கம் இலங்கைக்கு 288,610 மலேசியன் ரிங்கிட் ( 22,350,000 ரூபா) மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸிடம், புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனினால் மருத்துவப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
மலேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நன்கொடையானது மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும் நட்பையும் அதன் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்புக் காலத்தில் மலேசிய மக்கள் இலங்கை மக்களுடன் இருப்பதாகவும், அதன் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்திற்கு பங்களிப்பு உதவும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
